சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள வாழவந்தி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் நடைபெற்றுள்ள பணிகளை தமிழக சட்டமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு உறுப்பினர்கள் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள், ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி ஆகிய இடங்களையும் சட்டமன்ற பொதுக் கணக்குக் குழுவினர் நேரில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், கட்டிடத்தின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து ஆய்வு செய்தனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் தொகுதியின் வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியை முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறியவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



-hcTFAGMRGb.jpg)