ட்ரெண்டிங்

வேளாண் சங்கத்தில் ரூபாய் 3.19 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்!

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 3 கோடியே 19 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 

கடந்த வாரத்தைக் காட்டிலும் குவிண்டாலுக்கு 8,000 ரூபாய் வரை மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் முதல் முறையாக விரலி மஞ்சள் 23,000- ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

வழக்கத்தை விட கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.