சேலம் மாவட்டம், ஏற்காட்டை அடுத்த நல்லூர் பகுதியில் உள்ள பேய்காடு என்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 45). இவர் வீட்டில் சட்டவிரோதமாக, நாட்டுத்துப்பாக்கி மற்றும் வெடிமருந்தைப் பதுக்கி வைத்திருப்பதாக ஏற்காடு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, ஏற்காடு காவல்துறை ஆய்வாளர் செந்தில்ராஜ் மோகன் தலைமையிலான காவல்துறையினர், ராமசாமி வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, நாட்டுத்துப்பாக்கி மற்றும் 50 கிலோ வெடி மருந்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன், தப்பியோடிய ராமசாமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

