சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் 62 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,015 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் நீர்இருப்பு 61.83 அடியாக இருந்த நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 62.24 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதேபோல், மேட்டூரைச் சுற்றியுள்ள மீன்கடைகளில் மீன் வியாபாரம் சூடுப்பிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



-hcTFAGMRGb.jpg)