சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் வந்து கொண்டிருந்தார்.
அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் வழியில் பல்வேறு இடங்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அதன்படி 4 ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் துணை முதல் அமைச்சருக்கு வரவேற்பு அளித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்ததை அறிந்த துணை முதலமைச்சர் தனது வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்த அறிவுறுத்தினார்.அதன் படி அவரது வாகனம் நிறுத்தப்பட்டு..
ஆம்புலன்ஸ் வாகனம் சென்ற பின்னர் துணை முதலமைச்சர் வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தது.

-xrImVGohrr.jpg )
