ட்ரெண்டிங்

சேலம் மாநகரில் பலத்த மழை! 

சேலம் மாநகர பகுதிகளில் இன்று (நவ.04) மாலை 04.30 மணி முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, பட்டைக்கோவில், கடைவீதி, ஆட்சியர் அலுவலகம், அழகாபுரம், ஏற்காடு அடிவாரம், அயோத்தியாப்பட்டணம், குகை, தாதகாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. 

கனமழை காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். எனினும், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நேரத்தில் சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.