ட்ரெண்டிங்

வெள்ளாட்டு குட்டிகளை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்! 

சேலம் மாவட்டம், ஓமலூர் ஆட்டுச்சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மழை பெய்து வருவதால் வளர்ப்பு ஆடுகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, மழைக் காரணமாக புற்கள் முளைத்து மேய்ச்சல் நிலமாக மாறுவதால் வளர்ப்புக்கான செம்மறி மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளை வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். 

ஒரே நாளில் சுமார் ரூபாய் 1 கோடியே 26 லட்சம் அளவிற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.