ட்ரெண்டிங்

பள்ளியில் திருவள்ளுவர் சிலை அமைத்துக் கொடுத்த ஆசிரியர்!

 

சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக 1995- ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய இந்திரஜித், தற்போது இந்த ஆண்டு பணி ஓய்வுப் பெறுவதை முன்னிட்டு, தான் பணியாற்றிய பள்ளிக்கு அன்பளிப்பு வழங்கும் வகையிலும், இதே பள்ளியில் பணியாற்றிய தமிழ் பட்டதாரி ஆசிரியையான தன்னுடைய மனைவி அனுராதாவின் நினைவாகவும் ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரத்து மதிப்பில் திருவள்ளுவர் சிலை, குடில் மற்றும் சுற்றுச்சுவர் தரைத்தளம் கிரானைட் டைல்ஸ் அமைத்து, இப்பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கி உள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து, சிலை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (நவ.15) காலை 10.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எடப்பாடி நகர மன்றத் தலைவர் பாட்ஷா, மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் இந்திரஜித் ஆகியோர் மலர்தூவி, திருவள்ளுவர் மணிமண்டபத்தினை திறந்து வைத்தனர்.

 

பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை அமைத்துக் கொண்டு ஆசிரியருக்கு, சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.