சேலம் மாவட்டம், எடப்பாடியில் கனமழை பெய்ததால், பாவாந்திரம் பகுதியில் வள்ளி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. எனினும், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், யாருக்கும் எவ்வித காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர் நேரில் ஆய்வுச் செய்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவியை அளித்தனர்.
மேலும், ராமர்கோயில் பகுதியில் 10- க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், குடியிருப்புவாசிகள் தண்ணீரை வெளியேற்றி வருகின்றன. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


