ட்ரெண்டிங்

நீட் தேர்வுக்கு தீர்வு என்ன?- யோசனை சொன்ன விஜய்! 

சென்னை திருவான்மியூரில் 2-ம் கட்டமாக நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன். தமிழகத்தில் இருந்து அனுப்பிய மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மசோதாவுக்கு காலதாமதம் எதுவும் இன்றி ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்; 

மத்திய கல்வி நிறுவனங்களுக்கு தேவையென்றால் நுழைவுத்தேர்வு நடத்திக் கொள்ளட்டும்; நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. கிராமப்புற, பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர். மாநில கல்வியில் பயின்றுவிட்டு, தேசிய கல்வியில் தேர்வு எழுத எழுத சொல்வது அநீதி. 

ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்; பன்முகத்தன்மை என்பது பலம் தானே தவிர பலவீனம் கிடையாது; மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேறு ஒரு முறையில் தேர்வு நடத்தினால் எப்படி? பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவது தான் ஒரே தீர்வு; இல்லையெனில் அரசமைப்பைத் திருத்தி சிறப்பு பொதுப்பட்டியல் ஒன்றை உருவாக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.