ட்ரெண்டிங்

எடப்பாடியில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூபாய் 42.67 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனை!

சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு உட்பட்ட நெடுங்குளம் பிரதான சாலையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று (செப்டம்பர் 02) பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், எடப்பாடி, ஓமலூர், கடையாம்பட்டி, தாரமங்கலம், மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 

அதேபோல், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பருத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர். நாள் முழுவதும் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 594 குவிண்டால் எடைக்கொண்ட 1,674 பருத்தி மூட்டைகள் ரூபாய் 42.67 லட்சத்துக்கு விற்பனையானது. பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 6,899 முதல் ரூபாய் 7,359 வரை ஏலம் போனது. 

ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் குவிண்டால் கணக்கில் பருத்தி மூட்டைகளை வாங்கிச் சென்றனர். வழக்கத்தை விட பருத்தி மூட்டைகளுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.