சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 6 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளி இனாம் வசூல் மற்றும் ஒப்பந்தம் விடுவதற்கு லஞ்சம் பெறுவதாகப் புகார் பெறப்பட்டது. இதையடுத்து, 15 பேர் கொண்ட சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 6 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரொக்கத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கலைஞர் வீடு, பிரதமர் வீடு ஒதுக்கீட்டில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.


