ட்ரெண்டிங்

சேலத்தில் தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்! 

சேலத்தில் தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பது தங்க நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

சேலத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூபாய் 53,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 90 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தைத் தொட்டு வருவது ஏழை, எளிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொடும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.