சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே அவசர ஊர்தியும், ஓட்டுனர் பயிற்சி பள்ளி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மேட்டூரில் இருந்து மேச்சேரி நோக்கிச் சென்ற ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு சொந்தமான லாரி, சந்தைப்பேட்டைக்கு அருகே வந்துக் கொண்டிருந்த போது, குஞ்சாண்டியூரில் இருந்து மேட்டூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை நோக்கிச் சென்ற அவசர ஊர்தி முன்னாள் சென்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்ற போது, மழையின் காரணமாக பிரேக் படிக்காததாலும், லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அவசர ஊர்தியில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக, சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.


