ஆன்மிகம்

ஜூலை 25- ஆம் தேதி சேலம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்!

ஜூலை 25- ஆம் தேதி சேலம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்! 

தமிழகத்தில் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சியாகத் திகழ்கிறது சேலம் மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி என நான்கு மண்டலங்கள் உள்ளன. இந்த நான்கு மண்டலங்களிலும் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது தமிழக அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

இந்த நிலையில், ஜூலை 25- ஆம் தேதி காலை 11.00 மணிக்கு சேலம் மாநகராட்சி, மைய அலுவலக மாமன்ற கூட்ட அரங்கில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாமன்ற இயல்புக் கூட்டம் நடைபெறும் என  மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.