சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 25- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
முட்டல் வனப்பகுதியில் இருந்து கீழ்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட சடையம்பட்டி, கல்லூர், நாகலூர் உள்ளிட்ட 25 கிராமங்களுக்கு செல்லும் பாதையில் மண் சரிவுக் காரணமாக, ராட்சத பாறை சாலையின் நடுவே விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்காததால், மலை கிராம மக்களே ஒன்றிணைந்து சாலையில் ஏற்பட்ட மண் சரிவைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.


