ட்ரெண்டிங்

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 5,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு இன்று (ஆகஸ்ட் 27) காலை 08.00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 6,266 கனஅடியில் இருந்து 3,423 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்துக் குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து குறுவைச் சாகுபடிக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.42 அடியில் இருந்து 53.70 அடியாக சார்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 20.22 டி.எம்.சி.யாக உள்ளது.