சேலம் மாவட்டம்,எடப்பாடி அருகே நிலதகராறில் அண்ணன் மகனே சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த இச்சம்பவத்தில் கணவன் மனைவி இருவரை கைது செய்த போலீசார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள கொங்கணபுரம் அருகேயுள்ள எருமப்பட்டி கிராமம் மட்டம்பட்டியைச் சேர்ந்த முத்துசாமி(60) என்பவர் பருத்தி உள்ளிட்ட விவசாயம் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
முத்துச்சாமிக்கு உடன் பிறந்த இரண்டு சகோதரர்களும் சகோதரிகளும் என ஐந்து பேர் இருப்பதாகவும் இவர்களது தந்தை பெயரில் ஒரு ஏக்கர் 50 சென்ட் நிலம் இருப்பதாகவும், அம்மா பச்சையம்மாள் பெயரில் 50 சென்ட் நிலம் இருப்பதாகவும் இதில் தலா 50 சென்ட் நிலங்களாக பிரித்து அனைவரும் விவசாயம் செய்து வந்ததாகவும் முத்துசாமி மட்டும் அம்மா சொத்தில் தனக்கு சேர வேண்டிய 20 சென்ட் நிலத்தை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்து விட்டதாகவும் இதனால் முத்துசாமிக்கும் அவரது அண்ணன் மகன் குப்புசாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த நிலத்தகராறு காரணமாக நேற்று இரவு கடுமையான வாக்குவாதம் நிலவியதாக கூறப்படுகிறது...
அப்போது குப்புசாமி அவரது மனைவி கவிதா உதவியோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை சித்தப்பா முத்துச்சாமி மார்பகத்தின் மீது கத்தியால் குத்தியதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், முத்துசாமி உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே முத்துச்சாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குப்புசாமி அவரது மனைவி கவிதா, குப்புசாமியின் தந்தை குப்புசாமி ஆகிய மூன்று பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து கணவன் குப்புசாமி மனைவி கவிதா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்...
நிலத்தகராறில் அண்ணன் மகனே தனது சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

-I7sbfpaGAd.jpg )
-SXgDfGgJfO.jpg)