ட்ரெண்டிங்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கிழக்கு காடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் அஜித்குமார் (வயது 24). இவர் தனது நண்பர் பாஸ்கருடன், ஆகஸ்ட் 31- ஆம் தேதி இரவு 09.00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு சென்றுக் கொண்டிருந்தார். 

இருசக்கர வாகனத்தை பாஸ்கர் ஒட்டிய நிலையில், முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்ற போது, இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியது. இதனால் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், படுகாயமடைந்த அஜித்குமாரை சாலையில் சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கும், பாஸ்கரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். 

எனினும், அஜித்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரிப்பட்டி காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.