ட்ரெண்டிங்

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை!

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை! 

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 23,000 கனஅடியில் இருந்து 22,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,000 கனஅடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து, தற்போது வினாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துக் காணப்படுகிறது. 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகேனக்கல் பரிசல் சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல், காவிரி ஆற்றின் கரையோரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒகேனக்கல்லில் குளிப்பதற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது