சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த வழக்கில் ஐந்து பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்...
சேலம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரா கார்டன் மாசி நாயக்கன்பட்டி யைப் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் வீட்டில் கடந்த ( நவ.13 ) ம் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்றனர். இதை தொடர்ந்து சந்திரசேகர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் அம்மாபேட்டை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த தீனா (25) அய்யனார் (19) ரகுவரன் (30) வசந்தகுமார் (35) மணிகண்டன் (51) ஆகியோர்களை இன்று நவ.16 ஆம் தேதி அம்மாபேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு விசாரணையின் முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டது இதை தொடர்ந்து. காவல்துறையினர் சம்பந்தப்பட்ட 5 நபர் களையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.


