சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கொங்கணாபுரம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், நேற்று (நவ.04) பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள், 1,700 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
இதில், பிடி ரகம் குவிண்டால் ரூபாய் 6,250 முதல் 7,450 ரூபாய் வரையும், கொட்டு ரகம் ரூபாய் 3,950 முதல் 5,250 வரை ஏலம் போனது. மொத்தம் 1,700 மூட்டை பருத்தி ரூபாய் 35 லட்சத்திற்கு ஏலம் போனது.



