ட்ரெண்டிங்

ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

சபரிமலை செல்லும் ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் சேலம் வழியாக தாம்பரம்- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக, தாம்பரம்- கொல்லம் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி, டிசம்பர் 16- ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து கொல்லத்திற்கும், டிசம்பர் 17- ஆம் தேதி கொல்லத்தில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

 

மதியம் 01.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 06.45 மணிக்கு கொல்லத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், காலை 10.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 05.10 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.