ட்ரெண்டிங்

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 32.97 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது! 

சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று ( ஆகஸ்ட் 04) பருத்தி விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பருத்தி மூட்டைகளைக் கொண்டு வந்தனர். அதேபோல், கோவை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். 

நாள் முழுவதும் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சுமார் 1,130 பருத்தி மூட்டைகள் ரூபாய் 32.97 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 6,599 ரூபாயாகவும், அதிகபட்சமாக ரூபாய் 7600 வரை ஏலம் போனது. 

அனைத்து ரக பருத்திகளுக்கும் கடந்த வாரத்தை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 50 முதல் ரூபாய் 100 வரை கூடுதல் விலைக் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.