ட்ரெண்டிங்

கால்நடைச் சந்தையில் ரூபாய் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

 

சேலம் மாவட்டம், மேட்டூருக்கு அருகே கால்நடைச் சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

 

நங்கவள்ளியில் தீபாவளி பண்டிகையையொட்டி, நடைபெற்ற கால்நடைச் சந்தையில், சேலம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். அதேபோல், கால்நடைச் சந்தைக்கு வந்திருந்த வியாபாரிகள், ஆடுகளைப் போட்டிப்போட்டு கொண்டு வாங்கிச் சென்றனர்.

 

வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் 20,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரை விற்பனையாகின. குரும்பாடுகள் 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனைச் செய்யப்பட்டன. சுமார் 2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாகத் தெரிவிக்கும் வியாபாரிகள், வழக்கத்தை விட கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.