ட்ரெண்டிங்

ஜன.10 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்!

 

ரூபாய் 1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 10- ஆம் தேதி முதல் விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 10- ஆம் தேதி முதல் ஜனவரி 13- ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பினை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 13- ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற முடியாதவர், வரும் ஜனவரி 14-ல் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல், பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு நாளை (ஜன.07) முதல் ஜனவரி 09 வரை ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூபாய் 1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, வேட்டி, சேலைகள் இடம் பெற்றிருக்கும். அதனை சரிப்பார்த்து பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.