ட்ரெண்டிங்

சேலம் - வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு சிறப்பு முகாம் !!!

 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று 22.11.2025 சனிக்கிழமை மற்றும் 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் நடைபெற உள்ளது - மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர்,தகவல்..

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதற்கான படிவத்தினை நிரப்ப உதவி செய்யும் பொருட்டு, சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலும், ஊரக பகுதிகளுக்கு கிராம ஊராட்சி அலுவலத்திலும் சிறப்பு முகாம்கள் இன்று 22.11.2025 சனிக்கிழமை மற்றும் 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 

எனவே இந்த சிறப்பு முகாமில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஒப்படைக்கவும் வாக்காளர்கள் இம்முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா பிருந்தா தேவி, தெரிவித்துள்ளார்.