பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், களிமண்ணால் செய்யப்படும் மண் பானை உற்பத்தித் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, காமலாபுரம், பொட்டியபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் மண்பாண்டத் தொழிலாளர்கள், மண்பானை உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இங்கு விதவிதமான அளவுகளிலும், விதவிதமான வண்ணங்களிலும் உற்பத்தி செய்யப்படும் மண் பானைகள் சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மட்டுமின்றி நாமக்கல், ஓசூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவதாகக் கூறுகின்றனர்.
மண் பானைகள், வர்ணம் பூசப்பட்ட மண் பானைகள் அளவுக்கு ஏற்றவாறு ரூபாய் 200 முதல் ரூபாய் 700 வரை மார்க்கெட்டுகளில் விற்பனையாவதாகத் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



-SXgDfGgJfO.jpg)