ட்ரெண்டிங்

அதிகளவில் இறைச்சி மாடுகளை வாங்கிச் சென்ற கேரள வியாபாரிகள்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நடைபெற்ற பெருமாள் கோயில் மாட்டுச் சந்தையில் விற்பனை மந்தமாகக் காணப்பட்டது.

 

தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற பெருமாள் கோவில் மாட்டுச் சந்தை இன்று (நவ.03) கூடியது. இந்த சந்தைக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 2,500- க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

 

இதில், பசு மாடுகள் மற்றும் செனை மாடுகள் 40,000 ரூபாய் முதல் 65,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், காளைகள் 50,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை விற்பனையாகின. இருந்தாலும், விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.

 

அதேநேரம், கேரள வியாபாரிகள் இறைச்சிக்கான எருமை மாடுகளையும், அடிமாடுகளையும் அதிகளவில் வாங்கிச் சென்றனர். இந்த நிலையில், மூன்று கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.