ட்ரெண்டிங்

சேலம்-போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி; 4 பேர் கைது.

 

சேலம் மாநகர காவல் துறைக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாநகர் ஜாதி ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரி என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் இவருக்கு சேலம் தரமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டுமனைக்கு சொந்தமான 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது.

இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் ரூ.51 லட்சத்திற்கு விற்பனை செய்ததாகவும், இதற்கு தொடர்புடையவர்கள் ஆவணங்களை போலியாக உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் மகேஸ்வரி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நில மோசடியில் தொடர்புடைய குமார் (34), சத்யா (33), ஜெயராம் (49), ராஜா (31) மற்றும் ராதேஷ் (42) ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை மோசடியாக விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.