ட்ரெண்டிங்

குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன-டி.எஸ்.பி. ஹரி சங்கரி பேட்டி!

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண் குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருவதாக காவல் துணைக் கண்காணிப்பாளர் ஹரி சங்கரி தெரிவித்துள்ளார்.இதனை தடுக்கும் விதமாக வரும் சனிக்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

வாழப்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ஹரி சங்கரி, "கொரோனா காலத்திற்கு பிறகு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் போக்ஸோ வழக்குகள் அதிகரித்துள்ளது. வாழப்பாடியைச் சுற்றியுள்ள மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்கெல்லாம் குழந்தைகள் திருமணம் அதிகரித்துள்ளது.

 

காவல்துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.குழந்தைகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களுக்கென்று சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.அதேபோல், மாணவிகளுக்கு பள்ளி வாரியாகச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.