ட்ரெண்டிங்

நெடுஞ்சாலைப் பிரிவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி சாலை மறியல்!

பிரிவு சாலையில் மின்விளக்கு அமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பழனியாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கொத்தாம்பாடியில் பணி முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இதையடுத்து, கொத்தாம்பாடி பிரிவு சாலையில் மின்விளக்கு அமைத்துத் தர வலியுறுத்தி, பொதுமக்கள் சாலையே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த மின்சார வாரியத்தின் அதிகாரிகள், பொதுமக்களுடன் பேசசுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்விளக்குகள் அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். 

இதையடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்பினர். இந்த அந்த நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.