ட்ரெண்டிங்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்படாது" என அறிவிப்பு!

 

சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் இறைச்சிக் கடைகள் செயல்படாது என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலசந்தர் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சேலம் மாநகராட்சி அணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வள்ளலார் தினத்தையொட்டி, நாளை (ஜன.25) இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படத் தடை விதித்து அரசு உத்திரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், வள்ளலார் தினத்தன்று சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் விற்பனை தடை செய்யப்படுகிறது.

 

அரசின் உத்தரவிற்கிணங்க, சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை அடைத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், அரசின் உத்திரவினை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனவும் எச்சரித்துள்ளார்.