ட்ரெண்டிங்

ஆவின் பன்னீர், பாதாம் மிக்ஸ் பவுடர் விலை உயர்வு!

ஆவின் பன்னீர், பாதாம் மிக்ஸ் பவுடர் விலை உயர்வு!


ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் பன்னீர், பாதாம் மிக்ஸ் பவுடர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அதன்படி, ஒரு கிலோ ஆவின் பன்னீர் விலை ரூபாய் 450- லிருந்து ரூபாய் 550 ஆகவும், அரை கிலோ பன்னீர் ரூபாய் 250- லிருந்து ரூபாய் 300 ஆகவும், 200 கிராம் பன்னீர் ரூபாய் 100- லிருந்து ரூபாய் 120 ஆகவும், 200 கிராம் பாதாம் மிக்ஸ் பவுடர் 100-லிருந்து 120 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு தமிழகம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சமீப காலமாக ஆவின் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போது 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.