அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளையின் சார்பில் சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக் கூடிய ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.
சேலம் சண்முகா மருத்துவமனையில் உள்ள அரங்கில் சுமார் 300 குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான பேஸ்ட், பிரஸ், சோப்பு, புத்தாடைகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள், நாப்கின் அடங்கிய மிலிட் பெட்டகமும், இரவு உணவும் வழங்கப்பட்டது.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் சேலம் தலைமையக காவல்துறையின் துணை ஆணையர் சந்திரமௌலி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன், கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வராஜ், ஜென்னிஸ் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கர்லின் எபி மற்றும் சண்முகா மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முன்னதாக குழந்தைகளையும், முதியோர்களையும் மகிழ்விக்க பலவிதமான மேஜிக் ஷோ மற்றும் பப்பட் ஷோ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து வந்திருந்த நட்சத்திர களைஞர்கள் சிம்பு மதன், சலீம், பவர் பிரகாஷ் ஆகியோர் பல குரல் மற்றும் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ஒய்.எப்ஃ.சி குழுவினரின் பாடல்களும் இடம்பெற்றன.
மேலும் அறம் அன்பின் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் பல நிறுவனங்களின் தலைவர்களும், நிர்வாகிகளும் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியினை அறம் அன்பின் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் மதன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
அதேபோல், மீடியா பார்ட்னர்ஸ் சேலம் ஜஸ்ட் நவ் மற்றும் சூரியன் எஃப்எம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


