ட்ரெண்டிங்

பதக்கங்களை குவித்த சேலம் வீராங்கனைகள்! 

ஜெர்மனி நாட்டின் கலோன் நகரில் உள்ள மைதானத்தில் உலக அளவிலான உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில், இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

இந்த போட்டியில், இந்திய அணி சார்பில், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெண்ணிலா, இன்பத்தமிழ் ஆகிய இரண்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வீராங்கனை வெண்ணிலா தட்டு எறிதல் மற்றும் 100 மீட்டர் மற்றும் 60 மீட்டர் பிரிவுகளில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மூன்று வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். அதேபோல், மற்றொரு வீராங்கனையான இன்பத்தமிழ் 60 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 

இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள சேலம் வீராங்கனைகளுக்கு பல்வேறு தலைவர்களும், விளையாட்டு அமைப்புகளும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.