சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்துக் கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சிக்குட்பட்ட பம்பரப்பட்டியானூரில் தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் குறித்து ஊராட்சித் தலைவர் ஜெயமணியிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். மனு அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், குடிநீர் வசதிக்கோரி, கிராம மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டம் குறித்து ஊராட்சித் தலைவர், கிராம மக்கள் மீது புகார் அளித்த நிலையில், ஊராட்சித் தலைவர் தனது கணவரை வைத்து மிரட்டியதாகக் கூறி, கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.



-hcTFAGMRGb.jpg)