ட்ரெண்டிங்

சேலத்தில் இருந்து பல்வேறு நகரங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு விமான சேவை!

 

சேலம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள் வழியாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அபுதாபி, ஷார்ஜா, தோஹா, ஜெட்டா, குவைத் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு விமான சேவையை வழங்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

அதேபோல், சேலத்தில் இருந்து ஹைதராபாத் வழியாக கோவா, டெல்லி, இந்தூர், மங்களூரு, ராஞ்சி, கோழிக்கோடு, கொல்கத்தா, கொச்சின், ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட 30 நகரங்களுக்கு விமான சேவையைத் தொடங்கவுள்ளதாகவும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சேலத்தில் இருந்து சென்னை வழியாக இந்தூர், லக்னோ, நாக்பூர், புனே, ராஜமுந்திரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட 19 நகரங்களுக்கு விமான சேவையைத் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இண்டிகோ நிறுவனம், சேலத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவைகளைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.