ட்ரெண்டிங்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தலைமையாசிரியர் கைது!

 

ஓமலூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு, தலைமறைவாக இருந்த தலைமையாசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 88 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அங்கு சின்னராசு என்பவர் அந்த பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அவர் அந்த பள்ளியில் பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

 

இது குறித்து எழுந்த புகாரை அடுத்து, மகளிர் காவல்துறையினர், தலைமையாசிரியர் சின்னராசு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்தனர். அதனைத் தொடர்ந்து, தலைமையாசிரியர் சின்னராசு, விசாரணை அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

இதனிடையே, காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் தலைமறைவாக இருந்த சின்னராசுவை, பெங்களூருவில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.s