ட்ரெண்டிங்

ஆவின் பொருட்களின் விலை கடும் உயர்வு!

தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் பால் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

அதன்படி, 15 மிலி நெய் பாக்கெட் 14 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், 100 மிலி நெய் பாக்கெட் 70 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், 100 மிலி நெய் ஜார் 75 ரூபாயில் இருந்து 85 ரூபாயாகவும், 200 மிலி நெய் ஜார் 145 ரூபாயில் இருந்து 160 ரூபாயாகவும், 500 மிலி நெய் ஜார் 315 ரூபாயில் இருந்து 365 ரூபாயாகவும், 1 லிட்டர் நெய் நெய் ஜார் 630 ரூபாயில் இருந்து 700 ரூபாயாகவும், 500 மிலி நெய் அட்டைப்பெட்டி 310 ரூபாயில் இருந்து 360 ரூபாயாகவும், 1 லிட்டர் நெய் அட்டைப்பெட்டி 620 ரூபாயில் இருந்து 690 ரூபாயாகவும், 5 லிட்டர் நெய் ஜார் 3,250 ரூபாயில் இருந்து 3,600 ரூபாயாகவும், 15 கிலோ எடைக்கொண்ட நெய் டின் 10,725 ரூபாயில் இருந்து 11,880 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

500 மிலி பிரீமியம் நெய் 365 ரூபாயில் இருந்து 410 ரூபாயாகவும், 1 லிட்டர் பிரீமியம் நெய் 680 ரூபாயில் இருந்து 760 ரூபாயாகவும், பட்டர்-சி 100 கிராம் 55 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், பட்டர்- சி 500 கிராம் 260 ரூபாயில் இருந்து 275 ரூபாயாகவும், பட்டர்- டி 100 கிராம் 55 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், பட்டர்-டி 265 ரூபாயில் இருந்து 280 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அனைத்தும் இன்று (செப்.14) அமலுக்கு வந்துள்ளது.