ட்ரெண்டிங்

ஆட்டின் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கிச் சென்ற வியாபாரிகள்!

 

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் தீபாவளி பண்டிகையையொட்டி, நடைபெற்ற கால்நடைச் சந்தையில், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

 

வாரச்சந்தைக்கு ஏராளமான விவசாயிகள் வளர்ப்பு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆட்டின் விலையைப் பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொதுமக்களும் அவற்றை ஆவலோடு வாங்கிச் சென்றனர்.

 

கடந்த வாரம் 15,000 ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள், தற்போது 25,000 ரூபாய் வரை விலை அதிகரித்து, விற்பனையாகின. சில மணி நேரங்களிலேயே ஆடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.