ட்ரெண்டிங்

செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்தால் 2 லட்சம் அபராதம்! 

செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்தால் ரூபாய் 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ரசாயனம் தெளித்து செயற்கை முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றுள்ளனர். 

இதையடுத்து, மாம்பழம் வைக்கப்பட்டுள்ள குடோன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். செயற்கை முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைத்தால்  உணவுப் பாதுகாப்புச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்படும் என அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர்.