ட்ரெண்டிங்

கக்கன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கக்கன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கக்கன் திரைப்படத்தின் ஒலிநாடா மற்றும் முன்னோட்டக் காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் தேவா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அசன் மௌலானா, எழிலன், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, கக்கன் அவர்களின் மகள் கே.கஸ்தூரி பாய், பேத்தியும் சேலம் சரக காவல்துறைத் துணைத் தலைவருமான ராஜேஸ்வரி இ.கா.ப., திரைப்படத்  தயாரிப்பாளர் ஜோசப் பேபி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வகிக்கல உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.