ட்ரெண்டிங்

அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு! 

தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தமிழகம் முழுவதும் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, சேலம் மாவட்டம், ஓமலூர் ஒன்றியம், ஆணைக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., இன்று (ஆகஸ்ட் 28) காலை 08.00 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியின் சமையலறைக்கு சென்று, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வுச் செய்தார். 

அத்துடன், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து, உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட கல்வி அலுவலர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள், பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.