சேலம் மாவட்டம், ஆத்தூரில் பராமரிப்பின்றி உள்ள மின்கம்பங்களால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 500- க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில், மின் கம்பங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பராமரிப்பு இல்லாததால் மின்கம்பங்கள், மின் வயர்களில் செடி, கொடிகள் சூழ்ந்துக் காணப்படுகின்றன. மேலும், பருவமழை காலம் தொடங்கி விட்ட நிலையில், இதுப்போன்று பராமரிப்பின்றி காணப்படும் மின் கம்பங்களால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பின்றி இருக்கும் மின்கம்பங்களை சீரமைக்க மின்வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்கத் தடுக்க முடியும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றிப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.



