தமிழகத்தில் ஊழலை ஒழிக்கும் முயற்சியில், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறப்பான சாதனை.
மாநிலம் முழுவதும் லஞ்சம் வாங்குவோரை சுற்றிவளைத்து மடக்கிப் பிடிக்கும் பணியில் சேலம் பிரிவு முதலிடத்தில் திகழ்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இன்று வரை மொத்தம் 12 லஞ்ச வழக்குகள் பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, செப்டம்பர் மாதம் மட்டும் 4 வழக்குகளை பதிவு செய்திருப்பது, அவர்களின் தீவிர நடவடிக்கையை வெளிப்படுத்துகிறது.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராகச் செயல்படுவதில் சேலம் விஜிலென்ஸ் போலீசாரின் வேகம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, ஏற்படுத்துவதில் நம்பிக்கையை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு பிரிவு இரண்டாவது இடத்தை பிடித்து செயல்பட்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி பிரிவுகள் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது ஊழல் ஒழிப்பு துறை பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்றுள்ளது.
மாநிலம் முழுவதும் ஊழலை அடியோடு குறைக்க விஜிலென்ஸ் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நம்பிக்கையுடன் புகார் அளிப்பதும், ஒட்டன்சாட்டப்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

-(8)-vOfemIZKRM.jpg )

-hcTFAGMRGb.jpg)