ட்ரெண்டிங்

மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 

4வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் கலந்துக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாரியம்மன் தங்கவேலு, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

 

அந்த வகையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஆசிய பாரா போட்டிகளில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித் தந்துள்ள நமது மாரியம்மன் தங்கவேலுவுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!" என்று குறிப்பிட்டுள்ளார்.