ட்ரெண்டிங்

"அடிப்படை வசதியின்றித் தவிக்கும் பொதுமக்கள்"- எங்கு தெரியுமா?

 

பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இடையே நிலவும் பிரச்சனை காரணமாக, அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பேரூராட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த கவிதா தலைவராக உள்ளார். இவரது கணவர் ராஜா, தி.மு.க.வின் நகரச் செயலாளராகவும், வார்டு உறுப்பினராகவும் உள்ளார். பேரூராட்சி நிர்வாகம் அமைந்து ஓராண்டிற்குள்ளாகவே, பேரூராட்சி மன்றத் தலைவர் கவிதா மற்றும் அவரது கணவர் ராஜாவின் செயல்பாடுகளால் சொந்த கட்சியினரே அதிருப்தி உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த 2022- 23 நிதியாண்டில் பேரூராட்சியின் பொது நிதியில் இருந்து கழிப்பிடம் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க, 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தமிடப்பட்டும், பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவரின் தலையீட்டால், அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிப்பதாக வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் கூறுகையில், "தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இடையே நிலவும் பிரச்சனை காரணமாக பணிகள் செய்ய முடியவில்லை எனவும், அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும்" எனவும் தெரிவித்தார்.

 

இதன் தொடர்ச்சியாக, புகாருக்குள்ளான தி.மு.க.வின் பேரூராட்சி செயலாளர் ராஜாவை, அக்கட்சித் தலைமை அதிரடியாக நீக்கியுள்ளது. அந்த பதவிக்கு சண்முகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.