ட்ரெண்டிங்

தேர்வுச் செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும்- பட்டியலை வெளியி

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலை தயாரித்தல், வழிபாடு செய்தல் மற்றும் சிலை கரைத்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

 

அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திப் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாநகர எல்லைக்குட்பட்டவர்கள் மூக்கனேரியில் விநாயகர் சிலைகளைக் கரைத்திடலாம். மேலும்,சேலம் ஊரகப் பகுதிகளான சங்ககிரி உட்கோட்டம், தேவூர் காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் கல்வடங்கம் பகுதியிலும்,பூலாம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் சந்தைபேட்டை பில்லுக்குறிச்சி,கோம்பைக்காடு ஆகிய பகுதிகளிலும்,ஆத்தூர் உட்கோட்டம், தம்மம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் ஜங்கமசமுத்திரம்,செந்தாரப்பட்டி ஏரியிலும்,ஆத்தூர் ஊரகம் காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் முட்டல் ஏரி மற்றும் ஒட்டம்பாறை ஏரியிலும் சிலைகளைக் கரைத்திடலாம்.

 

மேட்டூர் உட்கோட்டம்,மேட்டூர் காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் காவேரி பாலம் பகுதியிலும், கொளத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் சென்றாய பெருமாள் கோயில் பகுதியிலும், கருமலைக்கூடல் காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் திப்பம்பட்டியிலும்,மேச்சேரி காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் கூனாண்டியூர்,கீரைக்காரனூரிலும், ஓமலூர் உட்கோட்டம்,தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் டேனீஷ்பேட்டை ஏரியிலும்,வாழப்பாடி உட்கோட்டம். வாழப்பாடி காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் ஆணைமடுவு அணை பகுதியிலும்,கருமந்துறை காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் மணியார்குண்டம் ஏரியிலும் சிலைகளைக் கரைத்திட நீர்நிலைகள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளது.

 

இதனைத் தவிர பிற இடங்களில் சிலைகளைக் கரைப்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.