ட்ரெண்டிங்

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதிகளில் விவசாயத்திற்கு அனுமதி மறுப்பு!

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் விவசாயம் செய்ய வனத்துறையினர் தடுப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

தருமபுரி மாவட்டம், ஓட்டனூர், கோட்டையூர், லிங்காபுரம், ஏமனூர் உள்ளிட்ட கிராமங்கள், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. மேட்டூர் அணை 100- அடிக்கு மேல் நிரம்பும் போது, இந்த பகுதிகள் தண்ணீர் ததும்பியவாறு கடல் போல் காட்சி அளிக்கும்.

 

இந்த கிராம மக்கள் விவசாயம், மீன்ப்பிடித்தல், கால்நடை மேய்ச்சலை தொழிலாகக் கொண்டுள்ளனர். மேட்டூர் அணையில் நீர் குறையும் போது மட்டுமே, விவசாயத்தில் ஈடுபடுவது வழக்கம் என்கின்றனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து, 30 அடிக்கு கீழ் சென்றுள்ளது. அதனால் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

இருப்பினும், வனத்துறையினர் அனுமதி மறுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி விவசாயி கூறுகையில், "எந்த விவசாயமும் மேற்கொள்ளக் கூடாது என வனத்துறையினர் கூறுகின்றனர். உழவுப் பணியில் ஈடுபட்டால் வழக்குப்பதிவுச் செய்கின்றனர். விவசாயம் செய்யவிடாமல் வனத்துறையினர் தடுக்கின்றனர். முப்பாட்டன் தலைமுறையில் இருந்து விவசாயம் செய்து வருகிறோம்" என்றார்.